மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையின் 2013 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நிகழ்வு -படங்கள்
மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையின் 2013 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நிகழ்வு கடந்த வாரம் அப்பாடசாலையின் அதிபர் எஸ்.தயானந்தராஜா தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடபிடாதிபதியும்,கணிதவியல் பேராசிரியருமான எஸ்.ஹீ.சற்குணராஜா, மொழியியல் மற்றும் ஆங்கிலத்துறையின் தலைவர் திருமதி சிவராணி சிற் சற்குணராஜா,நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் செல்லத்துரை சேது ராஜா மற்றும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பிரதிக்கல்விப்பணிப்பாளர் பி.அருணகிரிநாதன்,நல்லூர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.அகிலதாஸ்,யாழ் மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் சிவநேசன்,வவுனியா தமிழ் மகாவித்தியாலய அதிபர் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.
மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையின் 2013 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நிகழ்வு -படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 23, 2014
Rating:

No comments:
Post a Comment