தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு-படங்கள்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கரவெட்டி அல்வாய் தெற்கிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கலைப்பீட முதலாம் வருட மாணவனான நாகராசா சுதாகரன் (வயது 21) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று இந்த மாணவனின் பிறந்த நாளாகும். இந்நிலையில், பிறந்தநாளில் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அம்மாணவர், தனது முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) குறிப்பொன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதன் பின்னரே, அம்மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரது சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகப்புத்தகத்தில் தற்கொலை செய்வதாகப் பதிவிட்டபின் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி இடம்பெறுகின்றன.
தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 23, 2014
Rating:

No comments:
Post a Comment