வட மாகாண முதலமைச்சரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து
அமைதியான அர்த்தமுள்ள சமாதானத்தை உருவாக்குவதற்கும், நீடித்து நிலைக்கின்ற அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், சிறுபான்மை சமூகங்களின் அடிப்படை அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கும், தமிழ் – முஸ்லிம் உறவு மிகவும் அத்தியாவசியமானது என வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் அனைவரும் அர்ப்பணிப்புடன் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மண்ணில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட முன்னைய அச்சமான சூழ்நிலை தற்போது மாறி, தமிழ் மக்களோடு அந்நியோன்யமாக வாழும் நிலை உருவாகியிருப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண முதலமைச்சரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:

No comments:
Post a Comment