நல்லுறவுகள் தொடரவேண்டும்,நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி - ஜனாதிபதி
ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வு கலாசாரத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக இலங்கை முஸ்லிம் சமூகம் செய்துள்ள பெறுமதியான பங்களிப்புக்களை நாம் இச் சந்தர்ப்பத்தில் நினைவு
கூருவதுடன் இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இத்தகைய நல்லுறவுகள் தொடரவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கு ஏற்ப ஒரு முக்கியமான இஸ்லாமியக் கடமையான ஒரு மாத கால நோன்பை நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாட்டத்தில் உலகெங்கிலுமுள்ள தமது சகோதர முஸ்லிம்களுடன் இன்று இணைந்து கொள்கின்றனர்.
இது புனித அல்குர்ஆனினதும் இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கேற்ப நோன்பு ஆன்மீக ப் பெறுமானங்கள் மீதான ஆழ்ந்த ஈடுபாடு தொடர்ச்சியான வணக்க வழிபாடுகள், தியாகங்கள் போன்ற சமயக்கடமைகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் மகிழ்வுறும் சந்தர்ப்பமாகும்.
இலங்கைவாழ் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக எமது நாட்டின் ஏனைய இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து கடந்த காலங்களிலும் இந்த வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். நாட்டில் இன்று நிலவும் அமைதியான சூழ்நிலை அவர்களது சமய நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளதுடன் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் உதவும் வகையில் இந்த நிலைமை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.
ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வு கலாசாரத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக இலங்கை முஸ்லிம் சமூகம் செய்தள்ள பெறுமதியான பங்களிப்புக்களை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவதுடன் இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இத்தகைய நல்லுறவுகள் தொடர வேண்டுமென்றும் எதிர்பார்க்கின்றோம்.
நல்லுறவுகள் தொடரவேண்டும்,நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி - ஜனாதிபதி
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:


No comments:
Post a Comment