பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் ‘ஜிகர்தண்டா’
இயக்குனர் மணிரத்னம், ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் ‘ஜிகர்தண்டா’ படத்தை பாராட்டியுள்ளனர்.
சித்தார்த், சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். கதிரேசன் தயாரிப்பில் இப்படம் வெளியானது.
இப்படம் விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்திற்கு 60 திரையரங்குகள் அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பலரும் ‘ஜிகர்தண்டா’ படத்திற்கும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கும் தங்களது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்கள்.
மணிரத்னம்
கார்த்திக்.. நேற்று ஜிகர்தண்டா பார்த்தேன். படத்தால் கவரப்பட்டேன். உங்களுக்கென்று தனி பாணி இருக்கிறது. வாழ்த்துகள். இன்னும் இதைப் போன்ற பல படங்களை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள்.
ஷங்கர்
ஜிகர்தண்டா.. சூப்பர்.. யூகிக்க முடியாத, நகைச்சுவை மிளிரும், புது அனுபவம். எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். மிக நன்றாக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட். கலக்கல் சுப்பாராஜ்
பி.சி.ஸ்ரீராம்
முதலில் ‘வேலையில்லா பட்டதாரி’ இப்போது ‘ஜிகர்தண்டா’. வேறுபட்ட படங்களை அளித்தால் ரசிகர்கள் மெய்மறந்து ரசிக்கிறார்கள். ‘வேலையில்லா பட்டதாரி’ சொல்லியவிதத்தில் வெற்றி பெற்றது. ‘ஜிகர்தண்டா’ ஸ்டைலாக திரைக்கதையை காட்சிப்படுத்திய விதத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் ‘ஜிகர்தண்டா’
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:


No comments:
Post a Comment