பிரபல நகைச்சுவை நடிகர் ரொபின் வில்லியம்ஸ் தற்கொலை
ஹொலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், மூன்று முறை ஒஸ்கார் விருதை வென்றவருமான ரொபின் வில்லியம்ஸ், தனது 63ஆவது வயதில், கலிபோர்னியாவிலுள்ள அவரது வீட்டில் நேற்று (11) மாலை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கிறது.
கடந்த சில நாட்களாக அவர் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும், எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தன்னுடைய நகைச்சுவையான நடிப்பினால் பல லட்சம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ரொபின். இவரது மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட பல தலைவர்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
ரொபினுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் நடிப்பில் அசத்திய அவ்வை சண்முகி திரைப்படத்திற்கு மூலகாரணமாக நடிப்பை ஆங்கிலப் படத்தில் வெளிப்படுத்தியவர் ரொபின் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரபல நகைச்சுவை நடிகர் ரொபின் வில்லியம்ஸ் தற்கொலை
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:


No comments:
Post a Comment