பிரித்தானியாவைக் கலக்கும் சவூதி சுற்றுலாப் பயணியின் “தங்கக் கார்-
சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபரொருவர் தங்கக் காருடன் பிரித்தானியாவுக்கு சுற்றுலா சென்று அங்குள்ளவர்களை வாயைப் பிளக்குமளவுக்குஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
செல்வந்தரான மேற்படி சவூதி சுற்றுலாப் பயணி பிரித்தானியாவின் நைட்ஸ்பிரிட்ஜ் நகரிலுள்ள அல்ட்ரா – லூக்ஸ் வெலெஸ்லி ஹோட்டலில் தங்கியுள்ளார். இந்த ஹோட்டலுக்கு வெளியிலே தனது ‘தங்கக் கார்’ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இக்காரினைப் பார்வையிட அப்பகுதியை சேர்ந்த பிரித்தானிய மக்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன் அதனைப் புகைப்படமெடுத்து இணையத்தளத்தில் தரவேற்றி மகிழ்ந்துள்ளனர்.
பலரையும் ஈர்த்துள்ள இக்காரின் பெறுமதி சுமார் 32 கோடி ஆகும். ரேன்ஜ் ரோவர் காரின் சாதார மாதிரி ஒன்றினை வெளிப்புறமாக தங்க முலாம் மற்றும் கறுப்பு வர்ணத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காரின் சக்கரத்தின் சில்லுகள், பொனட் மற்றும் பம்பர் போன்றனவும் வீதிக்கு வெளியிலும் ஓடக்கூடியவாறு ‘ஓப் ரோட்’ வாகனமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
த மிஸ்டெயார் என்று அழைக்கப்படும் இந்த ரேன்ஜ் ரோவர் மாதிரியை உருவாக்க ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாம். பார்ப்பவர்களை ஈர்க்கும் த மிஸ்டெயார் மாதிரி கார் குறித்து பிரித்தானிய நபர் ஒருவர் கூறுகையில், இக்காருக்கு அருகிலேயே ரோல்ஸ் ரோய்ஸ் கோஸ்ட் கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது பார்வைக்கு தரம் குறைந்த கார் போன்று உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். ’666′ எனும் இலக்கத்தைக் கொண்ட இக்காரினை செல்வந்தரான சவூதி சுற்றுலாப் பயணி தனது விடுமுறைக்காக பிரித்தானியா செல்லும் போது கப்பலில் கொண்டு சென்றுள்ளார்.
இக்கார் வீதியில் செல்லும்போதும் தரித்திருக்கும் போதும் ஆச்சரியமாக பார்வையிட்டு வருகின்றனர்.
பிரித்தானியாவைக் கலக்கும் சவூதி சுற்றுலாப் பயணியின் “தங்கக் கார்-
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:



No comments:
Post a Comment