அண்மைய செய்திகள்

recent
-

ஜெயலலிதாவிற்கு மதுரையில் பாராட்டுவிழா நடத்தும் விவசாயிகள்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் தீர்ப்பை பெற்றுத் தந்ததற்காக மதுரையில் பாராட்டு விழா நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேட்டூர் அணையில் நீர் திறப்பு நிகழ்ச்சிக்காக வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரிப் பாசனப் பகுதி, டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் உத்தரவின் பேரில் மேட்டூர் அணையில் முன்கூட்டியே நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

 முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 ஆக உயர்த்த முதல்வர் மேற்கொண்ட முயற்சிகளால் தமிழகத்திற்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. 

 மேலும், இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வரும் 22ம் திகதி, மதுரையில் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை விவசாயிகள் சிறப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவிற்கு மதுரையில் பாராட்டுவிழா நடத்தும் விவசாயிகள் Reviewed by NEWMANNAR on August 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.