மன்/ஹீனைஸ் பாருக் முஸ்லிம் கலவன் பாடசாலை திறப்பு
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட சிலாத்துறை ஊடாக புத்தளம் செல்லும் பிரதான விதியில் அமைந்துள்ள ஹீனைஸ் பாருக் நகரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மன்/ஹீனைஸ் பாருக் கலவன் பாடசாலையினை இன்று காலை 9 மணியளவில் பிரதம அதிதியாக வருகை தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சருமான அல்-ஹாஜ் றிசாட் பதியுதின் திறந்து வைத்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்ததினால் எமது முசலி பிரதேசம் அழிந்துள்ளது.அதனை நாங்கள் மீள பெற வேண்டும் என்றால் கல்வின் ஊடாக மட்டும் தான் பெற முடியும் எனவே ஆசிரியர்கள்.பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு கல்வியின் மகிமை பற்றியும் அதன் பெறுமதி பற்றியும் எந்த நாலும் கற்றுகொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஹினைஸ் பாருக்.விசேட அதிதியாக வடமாகண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதின்.இலங்கை காரிய வள நிறுவனத்தின் நிறை வேற்றுபணிப்பாளர் அலிக்கான் சரீப் மற்றும் முசலி பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரன் கலந்து கொண்டனர்.
இந்த திறப்பு விழா சுமார் 11 மணியளவில் நிறைவடைந்தன.
மன்/ஹீனைஸ் பாருக் முஸ்லிம் கலவன் பாடசாலை திறப்பு
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:




No comments:
Post a Comment