அண்மைய செய்திகள்

recent
-

மதுபானசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

நுவரெலியா நானுஓயா ரதல்ல நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ரதல்ல நகரில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பிரதேசத்தின் பெண்கள் சிலரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நுவரெலியா நானுஓயா சமர்செட் தோட்டத்தின் லேங்டேல், தம்பகஸ்தலா, கார்லிபேக் ஆகிய பிரிவுகளை சேர்ந்த பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ரதல்ல பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையால், தமது பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள்
குற்றஞ்சுமத்துகின்றனர்.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில், இதுவரை தமது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்தார்.

மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நானுஓய நகரிலுள்ள மதுபானசாலையை அங்கிருந்து அகற்றுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

எனினும், குறித்த மதுபானசாலை அனுமதிப்பத்திரத்துடன் இயங்கி வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டது.
மதுபானசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் Reviewed by NEWMANNAR on August 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.