மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான விசாரணை நிறைவு
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறாம் கட்ட அமர்வுகள் மன்னார் மாவட்டத்தில் நேற்று நிறைவடைந்துள்ளன.
மன்னார் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 157 பேர் சாட்சியம் அளித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை நூற்றுக்கும் அதிகமான புதிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மன்னார், மாந்தை மற்றும் மடு பிரதேச செயலகங்களில் ஆணைக்கழுவின் ஆறாம் கட்ட விசாரணைகள் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றன.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் ஏற்கனவே கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட அமர்வுகளில் பதிவு செய்யப்பட்ட 786 முறைப்பாடுகள் தொடர்பில் சுயாதீன புலனாய்வுக் குழுவின் ஊடாக மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான விசாரணை நிறைவு
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:

No comments:
Post a Comment