மன்னார் மாவட்ட மின்சார சபை பொறியியலாளரின் கவனத்திற்கு
மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கையின் பின்பு முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட முசலி மக்கள் மீள்குடியேறினார்கள் பூநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மணற்குளம் மக்கள் 2009 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டார்கள்.
அந்த வகையில் மக்களின் மின்சார பிரச்சினையினை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் மன்னார் மின்சார சபையினால் கிராமத்தின் உள்ளக வீதிகளின் ஊடாக மின் கம்பங்களையும் மின் இணைப்புகளை விநியோகிக்காமல் மக்கள் வசிக்கின்ற குடியிருப்பு காணிகள் மற்றும் விட்டின் மேலாக மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதனால் கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மணற்குளம் கிராம மக்களின் குடியிருப்பு காணியின் ஊடாக மின் இணைப்புகள் வினியோகிக்கப்பட்டதனால் மழைக்காலங்களிலும் தங்களின் வீட்டு காணிகளை சுத்தம் செய்கின்ற வேலை கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்க வேண்டி உள்ளதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட இலங்கை மின்சார சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணற்குளம் மக்கள் வேண்டுகோள் விடுவிக்கின்றனர்.
எஸ் .எச் .எம் .வாஜித்
மன்னார் மாவட்ட மின்சார சபை பொறியியலாளரின் கவனத்திற்கு
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:





No comments:
Post a Comment