அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் காணிக்கச்சேரி

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளில் வதியும் பொது மக்களுக்கான காணிக்கச்சேரி நேற்று முந்தினம் செவ்வாய் மற்றும் நேற்று புதன் ஆகிய இரு தினங்களும் நடைபெற்றதாக சிரேஸ்ட காணி அதிகாரி கே.வசந்தன் தெரிவித்தார். 

 அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லினக்க ஆணைக்குழுவின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வதியும் பொது மக்களுக்கு குடியிருப்பதற்கு அரச காணிகளை வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

 இதனடிப்படையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த எருக்கலம்பிட்டி கிராமத்தில் உள்ள 4 கிராம சேவையாளர் பிரிவுகளில் 3 பிரிவுகளில் வதியும் பொது மக்களுக்கான காணிக்கச்சேரியே இவ்வாறு இடம் பெற்றுள்ளதாக சிரேஸ்ட காணி அதிகாரி கே.வசந்தன் மேலும் தெரிவித்தார். 

எருக்கலம்பிட்டி பெரியபள்ளிவாசல் மதிரிசா கட்டிடத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற குறித்த காணிக்கச்சேரிக்கு மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தலைமை தாங்கியதுடன் மன்னார் பிரதேச செயலக காணிக்கிளை உத்திகோகத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள் உற்பட பெரும் எண்ணிக்கையான பொது மக்களும் கலந்து கொண்டதாக காணி அதிகாரி கே.வசந்தன் தெரிவித்தார். 

மேலும் நாளை 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாகதாழ்வு மற்றும் மாதோட்டம் கிராமங்களிலும்,எதிர்வரும் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிறுத்தோப்பு கிராமத்திலும் பொது மக்களுக்கான காணிக்கச்சேரி நடைபெறவுள்ளதாக சிரேஸ்ட காணி அதிகாரி கே.வசந்தன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் காணிக்கச்சேரி Reviewed by NEWMANNAR on August 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.