மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் உயர் தர மாணவர்களுக்கான தொழில் நுட்பவியல் பிரிவு ஆரம்பிக்க ஏற்பாடு.
கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் 2014 ஆம் ஆண்டு முதல் கா.பொ.த உயர்தர வகுப்பில் தொழில் நுட்பவியல் பிரிவு ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த நிலையில் 2014 ஆம் 2016 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் 2013 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் உயர் தரத்தில் தொழில் நுட்பவியல் பிரிவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் குறித்த வகுப்புக்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி(13-08-2014) மன்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹீர் தெரிவித்தார்.
தொழில் நுட்பவியல் பாடத்திற்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளும் உரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அனுமதி பெற தகுதியுடைய மாணவர்கள் தமது பெற்றோருடன் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன் பாடசாலைக்கு சமூகம் தருமாறும் முதற்கட்டமாக 20 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என அதிபர் எம்.வை.மாஹீர் மேலும் தெரிவித்தார்.
மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் உயர் தர மாணவர்களுக்கான தொழில் நுட்பவியல் பிரிவு ஆரம்பிக்க ஏற்பாடு.
Reviewed by NEWMANNAR
on
August 07, 2014
Rating:

No comments:
Post a Comment