காணாமற்போனோர் தொடர்பில் மன்னாரிலிருந்து 312 முறைப்பாடுகள்
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மன்னார் மாவட்டத்திலிருந்து 312 முறைப்பாடுள் கிடைத்துள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான சாட்சி விசாரணை இம்மாதம் எட்டாம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டி.குணதாஸ தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்கனவே கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்களின் சாட்சியங்களை பதிவு செய்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு தடவைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றபோது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களையும் சேகரித்து வருகின்றது.
காணாமற்போனோர் தொடர்பில் மன்னாரிலிருந்து 312 முறைப்பாடுகள்
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment