உருவேற்றப்பட்டு தெய்வமாடிய நிலையில் குடும்பஸ்தர் மரணம்
மாந்திரீகச் சடங்கின்போது உருவேற்றப்பட்டு தெய்வமாடிய நிலையில் குடும்பஸ்தர் மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாகராசா சத்தியசீலன் (வயது 26 ) என்பவரே இவ்வாறு மரணமடைந்ததாக கிராம சேவையாளர் ஜீவராணி லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை வட்டவன் எனுமிடத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற சமயச் சடங்கில் இவர் உருவேற்றப்பட்டு தெய்வமாடிய நிலையில் மூர்ச்சையாகி விழுந்து சற்று நேரத்தில் இறந்து விட்டதாக இறந்தவரின் மனைவி ஸ்ரீகலா பொலிஸ் வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அலிஒலுவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
உருவேற்றப்பட்டு தெய்வமாடிய நிலையில் குடும்பஸ்தர் மரணம்
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:


No comments:
Post a Comment