வடக்கில் தமிழர் வீர விளையாட்டுக்களில் ஒன்றான ”மாட்டு வண்டு சவாரி”
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டு வண்டி சவாரி இன்றும் நாட்டிலுள்ளமை மனமகிழ்வை தருகின்றது.
வடக்கில் தற்போது இந்த மாட்டுவண்டி சவாரி இடம்பெறுகின்றமை, கலாசாரம் முன்னேற்றமடைவதற்கான சான்றாக உள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றும், தமிழர் கலாச்சார விளையாட்டுகளில் ஒன்றுமான மாட்டுவண்டி சவாரி இன்றும் வடக்கில் நிலைகொண்டுள்ளமை மகிழ்வை தருகின்றது.
உழவனுக்கு துணையாக நின்று உழைக்கும் காளைகளை கொண்டு தமிழன் அன்று இவ்வாறான வீர விளையாட்டுக்களை விளையாடி வந்ததாக சான்றுகள் கூறுகின்றன.
தமிழகத்தை போன்று இலங்கையில் தமிழர் வாழும் பகுதியிலும், குறித்த வீர விளையாட்டுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகின்றமை யாரும் அறிந்ததாகும்.
காளை அடக்குதல், மாட்டுவண்டி சவாரி போன்ற கலாச்சார விளையாட்டுக்கள் அருகி வரும் நிலையில் வடக்கில் மீண்டும் காணக்கூடியமை விஷேட அம்சமே இது.
குறிப்பிடக்கூடிய காலங்களில் மன்னார் மாவட்டத்தில் அதிகமாக குறித்த நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், தற்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெற்று வருவதாகவும் மாட்டுவண்டிசவாரியில் ஈடுபட்ட முதியவர் ஒருவர் குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்ட மாட்டுவண்டி சவாரி சங்கத்தினரின் முயற்சியால் குறித்த வீர விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ளது.
வடக்கில் தமிழர் வீர விளையாட்டுக்களில் ஒன்றான ”மாட்டு வண்டு சவாரி”
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:


No comments:
Post a Comment