இலங்கை மக்கள் தொகையில் 10 வீதமானோருக்கு மனநோய்
இலங்கை மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் ஏதோ ஒரு மனநோயினால் பீடிக்கப்பட்டுளளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவர்களில் பலர் பலவிதமான மனநோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவந்துள்ளது.
ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் விசேட நிபுணர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளடக்கப்படவில்லை.
இந்த மாகாணங்களிலும் மேற்படி ஆய்வை மேற்கொண்டிருந்தால், முடிவுகளில் பாரிய வித்தியாசம் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
நாட்டில் காணப்படும் பொருளாதார சுமை, மக்கள் வாழ்வதற்கு தேவையான வருமானம் கிடைக்காமை, கல்வி தகுதிகளுக்கு ஏற்ற தொழில் வாய்ப்புகள் கிடைக்காமை, மக்களின் வாழ்க்கை வேகம் உட்பட பல விடயங்கள் இந்த மனநோய்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.
நாட்டின் வாழும் மக்கள் தொகையில் பலருக்கு தாம் எண்ணியப்படி வாழ முடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன.
எவ்வாறாயினும் மக்கள் தொகையில் 10 வீதமானவர்கள் மனநோய்களினால் பீடிக்கப்பட்டிருப்பது பாரதூரமான நிலைமை எனவும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மக்கள் தொகையில் 10 வீதமானோருக்கு மனநோய்
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment