மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 30 ஓவர்கள் கொண்ட சிறப்பு கிரிக்கெட் போட்டி
பலவருடங்களாக இயங்காமல் இருந்த மன்னார் மாவட்ட கிரிக்கெட்; சங்கத்தினை கடினப்பந்து விளையாடும் கழகங்கள் ஒன்று சேர்ந்து புதிய நிர்வாகத்தினை ஏற்ப்படுத்தியிருந்தனர். தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகமானது கிரிக்கெட் வளர்ச்சிக்காக விரைவாக செயற்ப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏப்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் கிரிக்கெட் வளர்ச்சியினை ஏற்ப்படுத்துவதற்காகவும், மன்னார் மாவட்டத்திலுள்ள கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை அடையாளம் கண்பதற்காகவும், மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட கடினப்பந்து விளையாடும் கழகங்களிலுள்ள வீரர்கள் திறமையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தெரிவுசெய்யப்பட்டுள்ள இவ்வீரர்கள் சமபலத்துடன் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு அணி MANNAR KINGS எனவும் மற்றைய அணி MANNAR ROYALS எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப்போட்டியானது 30 ஓவர்கள் கொண்ட போட்டியாக நாளை 2014-10-05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
மேலும் இவ்வாறு மன்னார் வீரர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடும் நிகழ்வு மன்னார் மாவட்ட வரலாற்றில் இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னார் ஸ்டார் ஈகிள் விளையாட்டுக்கழகம் நடாத்திய மன்னார் பிறிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 20 ஓவர்கள் கொண்ட கண்காட்சி போட்டி இவ்வாறு நடைபெற்றது. ஆனாலும் 30 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 30 ஓவர்கள் கொண்ட சிறப்பு கிரிக்கெட் போட்டி
Reviewed by NEWMANNAR
on
October 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 04, 2014
Rating:


No comments:
Post a Comment