மன்னாரில் எதிர்வரும் 2 ஆம் திகதி கடையடைப்பு போராட்டம்.
மன்னார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 2 ஆம் திகதி மூடி எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக மன்னார் நகர வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிவித்தல் கடிதம் வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரில் எதிர்வரும் பண்டிகைக்கால வியாபாரம் தொடர்பில் நகர சபையால் வழங்கப்படவுள்ள கடைகளை நிறுத்துமாறு மன்னார் நகர சபை தலைவர்,செயலாளர்களுக்கு மன்னார் நகர வர்த்தக சங்கத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிவித்தல்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.இந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி மன்னார் நகர வர்த்தக சங்க நிர்வாகம் கூடி கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடி முழு அளவிலான கடை அடைப்பை மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக மன்னார் நகர வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது
மன்னாரில் எதிர்வரும் 2 ஆம் திகதி கடையடைப்பு போராட்டம்.
Reviewed by NEWMANNAR
on
November 30, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 30, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment