அண்மைய செய்திகள்

recent
-

ஈரான் வெளியுறவு அமைச்சர் இன்று பாகிஸ்தான் செல்லும் அறிகுறி!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) இன்று (24) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு வருகை தரவுள்ளதாக மத்திய கிழக்கு பிராந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் என மத்தியஸ்தராகச் செயற்படும் பாகிஸ்தான் முன்னர் அறிவித்திருந்தது. 

எவ்வாறாயினும், இந்தப் பேச்சுவார்த்தைகளை இந்த வார இறுதியில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அல் அரபியா (Al Arabiya) செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

















ஈரான் வெளியுறவு அமைச்சர் இன்று பாகிஸ்தான் செல்லும் அறிகுறி! Reviewed by Vijithan on April 24, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.