ஜனாதிபதி தேர்தலின் தபால் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்
ஜனாதிபதி தேர்தலின் தபால் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளிக்குமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ. அமரதாச தெரிவிக்கின்றார்.
விண்ணப்பங்களை கையளிப்பதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் தமது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் அவதானித்துக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 04 திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிற்கு அமைய நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் தகுதிபெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் மாதம் எட்டாம் திகதி முற்பகல் 9 மணி தொடக்கம் முற்பகல் 11 மணி வரை தேர்தல்கள் செயலக கேட்போர் கூடத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுகின்ற தினத்தில் முற்பகல் 9 மணி தொடக்கம் முற்பகல் 11.30 வரை வேட்பாளர்கள் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் தபால் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
November 23, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 23, 2014
Rating:


No comments:
Post a Comment