வவுனியாவில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை!
வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என திடீர் மரணவிசாரணை சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -
வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் உள்ள தனது வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்த இளைஞர் ஒருவர் வீட்டின் தாழ்வாரப் பகுதியில் உடுப்பு போடுவதற்காகக் கட்டப்பட்டிருந்த கொடிக் கயிற்றினால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டார்.
மொரிஸ் டிசாந்த் (வயது 30) என்வரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாயார் விடிந்ததும் வெளியில் வந்து பார்த்த போதே மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை தெரியவந்துள்ளது. வெளிநாடு ஒன்றில் வசிக்கும் இந்த இளைஞனின் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே தூக்கிட்டுத் தற்கொலைசெய்யக் காரணம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை!
Reviewed by NEWMANNAR
on
November 23, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 23, 2014
Rating:



No comments:
Post a Comment