அண்மைய செய்திகள்

recent
-

ஆயர் தலை­மை­யி­லான தமிழ் சிவில் சமூக வலை­ய­மைப்பு தமிழ் சிவில் சமூக அமையம் எனும் பெயரில் மாற்று வடிவம் பெற்­றுள்­ளது.


கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாகப் பல்­வேறு வழி­களில் குரல் கொடுத்து வந்த மன்னார் ஆயர் தலை­மை­யி­லான தமிழ் சிவில் சமூக வலை­ய­மைப்பு தமிழ் சிவில் சமூக அமையம் எனும் பெயரில் மாற்று வடிவம் பெற்­றுள்­ளது.

அண்­மையில் நடை­பெற்ற இவ் அமை­யத்தின் வரு­டாந்த ஒன்­று­கூ­டலில் அமை­யத்தின் கொள்கை ஆவ­ணமும் யாப்பும் ஒன்று கூடலில் பங்­கு­பற்­றி­யி­ருந்த 60இற்கும் மேற்­பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­களால் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது. 

மேலும் அமை­யத்தின் நிர்­வாகக் குழுவும் தெரிவு செய்­யப்­பட்­டது. அதன்­படி மன்னார் ஆயர் கலா­நிதி இரா­யப்பு ஜோசப் அழைப்­பா­ள­ரா­கவும் பொ.ந.சிங்கம் தியா­க­ராஜன் ராஜன் ஆகியோர் இணைச் செய­லா­ளர்­க­ளா­கவும் குமா­ர­வ­டிவேல் குரு­பரன் எழில் ராஜன் பேச்­சா­ளர்­க­ளா­கவும் பேரா­சி­ரியர் வி.பி. சிவ­நாதன் பொரு­ளா­ள­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

வடக்கு கிழக்­கி­லுள்ள அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கு­மான அமை­யத்தின் இணைப்­பா­ளர்­களும் வடக்குக் கிழக்­கிற்கு வெளி­யே­யான மாவட்­டங்­க­ளுக்­கான ஓர் இணைப்­பா­ளரும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.இதன்­போது மாவட்ட ரீதி­யாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு பொருத்தமான வேலைத்திட்டங்களும் அடையாளம் காணப்பட்டன.
ஆயர் தலை­மை­யி­லான தமிழ் சிவில் சமூக வலை­ய­மைப்பு தமிழ் சிவில் சமூக அமையம் எனும் பெயரில் மாற்று வடிவம் பெற்­றுள்­ளது. Reviewed by NEWMANNAR on November 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.