அண்மைய செய்திகள்

recent
-

போலி துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் மீது அமெரிக்க பொலிஸார் சூடு

அமெ­ரிக்­காவில் கிளேவ்லாண்ட் நக­ரி­லுள்ள விளை­யாட்டு மைதா­ன­மொன்றில் போலி துப்­பாக்­கி­யுடன் விளை­யா­டிய 12 வயதுச் சிறுவன் ஒருவன் பொலி­ஸாரால் சுட்­டுக் ­கொல்­லப்­பட்­டுள்ளான்.


கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.தாமிர் ரைஸ் என்ற மேற்­படி சிறுவன் விளை­யாட்டு மைதா­னத்தில் விளை­யா­டிய வேளை, தனது கையில் இருந்த விளை­யாட்­டுத்­துப்­பாக்­கியை ஏனை­ய­வர்­களை குறி­பார்ப்­பது போன்று தூக்­கிப்­பி­டித்­துள்ளான்.

இந்­நி­லையில் தாமிர் ரைஸ்ஸின் கரத்தில் நிஜ துப்­பாக்கி இருப்­ப­தாக தவ­ற­தாக கரு­திய ஒருவர் பொலி­ஸா­ருக்கு அது தொடர்பில் அறி­விக்­கவும் சம்­பவ இடத்­திற்கு வந்த பொலிஸார் தாமிர் மீது இரு தட­வைகள் துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­யுள்­ளனர்.

இதன் போது ஒரு துப்­பாக்கி ரவை தாமிரின் வயிற்றை துளைத்துச் சென்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து மருத்­து­வ­ம­னைக்கு கொண்டுசெல்­லப்­பட்ட தாமிர் சிகிச்சை பலன் அளிக்­காத நிலையில் உயி­ரி­ழந்­துள்ளான்.

மேற்­படி, துப்­பாக்கிச் சூட்­டுடன் தொடர்­பு­பட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களில் ஒருவர் உள்ளூர் பொலிஸ் படையில் ஒரு வரு­டத்­திற்கு முன்பே இணைந்துள்ளார். ஏனையவர்கள் பொலிஸ் துறையில் 10 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்டவர்களாவர்.

போலி துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் மீது அமெரிக்க பொலிஸார் சூடு Reviewed by NEWMANNAR on November 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.