மன்னார் மாவட்ட மீனவர்களை கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் துன்புறுத்துவதாக மீனவர்கள் விசனம்.-Photos
மன்னார் மாவட்ட மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள்,மற்றும் கடற்தொழில் பரிசோதகர்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும்,துன்பங்களுக்கும் உள்ளாக்கி வருவதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்ட எரி பொருள் மானியத்திற்கு பதிலாக சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம்(1.25-000) ஆயிரம் ரூபாவிற்கான வலைத்தொகுதிகள் மற்றும் மீனவர்களுக்கான தற்பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைவாக மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு கடற்தொழில் திணைக்களத்தின் ஊடாக குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்ட போதும் மிகவும் விலை குறைந்த தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சுமார் 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும்,கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் மற்றும் அங்கு கடமையாற்றும் கடற்தொழில் பரிசோதகர்கள் தேவையற்ற காரணங்களை கூறி பல மீனவர்களுக்கு குறித்த வலைத்தொகுதிகள் மற்றும்,தற்பாதுகாப்பு அங்கி ஆகியவற்றை வழங்காத நிலையில் அவற்றை மோசடி செய்துள்ளதாகவும்,பல மீனவர்களிடம் கையூட்டல்களைப்பெற்று குறித்த மானியப்பெருட்களை வழங்கியுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமின்றி கடற்தொழில் பரிசோதகர்கள் தமக்கு கிடைக்கும் இரகசிய தகவல்களின் மத்தியில் மன்னார் கடற்கரைக்குச் சென்று தடை செய்யப்பட்ட 'டைனமெற்' வெடி பொருட்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுவதாக கூறி மீனவர்கள் பலருக்கு எதிராக தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கடற்தொழில் பரிசோதகரான பி.தனபாலசிங்கம் என்பவருக்கு இரகசியமான முறையில் கிடைக்கப்பெற்ற போலி தகவலின் அடிப்படையில் பல மீனவர்களின் படகு அனுமதிப்பத்திரத்தை பறிமுதல் செய்துள்ளனார்.
அதற்கான காரணமாக தடைசெய்யப்பட்ட 'டைனமெற்' வெடி பொருட்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த படகுகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எழுத்து மூலம் வழங்கப்பட்டு படகுகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் 'டெனமெற்' வெடி பொருட்களோ அல்லது டைன மெற் வெடி பொருள் பயன்படுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட மீன்களோ தமது படகுகளில் இருந்து மீட்கப்படவில்லை என தெரிவித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்தொழில் பரிசோதகர்கள் சுயநலத்துடன் நடந்து கொள்வதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள பணிப்பாளர் எஸ்.மெராண்டா அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,,
மீனவர்களின் படகுகளில் இருந்து 'டைனமெற்' வெடி பொருட்கள் அல்லது வெடி பொருட்கள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் மீட்கப்படாது விட்டால் அவர்களின் படகுகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்ய முடியாது என தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவர்களை கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் துன்புறுத்துவதாக மீனவர்கள் விசனம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 25, 2014
Rating:

No comments:
Post a Comment