அண்மைய செய்திகள்

recent
-

பா. உறுப்பினர் சிறீதரனின் எண்ணத்தின் படி பசுமைத்தேசம் முயற்சி சாந்தபுரத்தில் இன்று ஆரம்பம்-Photos

யாழ் கிளிநொச்சி பா.உறுப்பினர் சி.சிறீதரனின் எண்ணத்திற்கு அமைய கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச்செயலகம் அறிவகத்தால் முன்னெடுக்கப்படும் பசுமைத்தேசம் வீட்டைச்சுற்றி ஒரு விளைச்சல் மண்ணை நம்பும் ஒரு மகத்தான முயற்சி விதைதானியம் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி சாந்தபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.





சாந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் யோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கரைச்சி பிரதேசசபை தலைவர் நாவை.குகராசா பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன் சாந்தபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதி மற்றும் நன்னீர் மீன்பிடி சங்க பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டு விதைதானியங்களை வழங்கி வைத்து உரையாற்றிய கரைச்சி பிரதேசசபை தலைவர் நாவை.குகராசா,

மனங்களில் விதைந்தவர்களை நினைவு கொள்ளும் இம்மாதத்தில் இத்தகைய நமது பொருளாதாரத்தை வளம்படுத்தும் கிராமிய மக்களுக்கான திட்டத்தை பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுவது மனம் நிறைவு தருகின்றது.

சாந்தபுரம் அர்ப்பணிப்பும் வளமான மண்ணும் நிறைந்த கிராமம் என்ற அடிப்படையில் இங்கே உங்களால் தூவப்படும் விதைகள் வாழ்வில் நம்பிக்கையை நிச்சயம் தருமென நம்புகின்றேன். கடந்த போர்க்காலங்களில் நாம் இம்மாதத்தில் கனவுகளை வெல்லவைக்க பல்வேறு சமுக நற்காரியங்களை செய்து வந்திருக்கின்றோம்.

அதன் நீட்சியாக எமது மண்ணை நினைவுகளோடு வளம்படுத்த இந்த விதைதானியங்களை பயன்படுத்துவோம். நமது பொருளாதாரத்தை பற்றி நாம் சிந்திப்பது அவசியம் நமது சொந்தக்காலில் நிற்பது பற்றி சிந்திப்பது அவசியம் அதுவே நம்மை நமது சந்ததியை அடிமை நிலையில் மீட்க கருவியாக அமையும் என்றார்.

பா. உறுப்பினர் சிறீதரனின் எண்ணத்தின் படி பசுமைத்தேசம் முயற்சி சாந்தபுரத்தில் இன்று ஆரம்பம்-Photos Reviewed by NEWMANNAR on November 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.