அமெரிக்காவின் 50 மாநிலங்களில் வெப்பநிலை வீழ்ச்சி
அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழமைக்கு மாறான இந்த காலநிலையால் நியூயோர்க்கின் மேற்குப் பிராந்தியத்தில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயோக்கில் தொடரும் பனிப்பொழிவினால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.
ஹவாய் உள்ளிட்ட அனைத்து அமெரிக்க மாநிலங்களிலும் வெப்பநிலை 2 பாகை செல்சியஸ் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை நிலையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 1976 ஆம் ஆண்டிற்கு பின்னர் நவம்பர் மாதத்தில் மிகவும் குளிரான காலநிலை தற்போது பதிவாகியுள்ளதாகவும் வானிலை சேவை நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் 50 மாநிலங்களில் வெப்பநிலை வீழ்ச்சி
Reviewed by NEWMANNAR
on
November 20, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 20, 2014
Rating:


No comments:
Post a Comment