அண்மைய செய்திகள்

recent
-

சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னர் புதிய அரசாங்கம் உருவாகும் – ரணில் விக்ரமசிங்க

சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னர் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேகாலையில் இன்று தெரிவித்தார்.

பாரிய மாற்றம் நேற்று ஏற்பட்டது, 20 என்றார்கள் 21இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் 35 நாட்கள் உள்ளன. 30 நாட்களும் சரியாக வேலை செய்தால் வெற்றிபெற முடியும். எங்களுடைய மோதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இல்லை. நாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்யவுள்ளோம் .மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வந்துள்ளார். அவருக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும். தற்போது ஸ்ரீலங்காவும் இல்லை, யூ.என்.பியும் இல்லை. இதன் காரணமாக நான் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க உள்ளேன். 500 கோடி ரூபாவை செலவிட்டு எனக்கெதிராக சுவரொட்டிகளை அச்சிட்டமைக்காக நான் கவலையடைகிறேன். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் அவற்றை அழிக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் இரண்டு தேர்தல்களே உள்ளன. முதலாவது தேர்தலில் வெற்றிக்கொண்டால் இரண்டவதை வெற்றிக்கொள்ள பிரச்சனையல்ல. சித்திரைப்புத்தாண்டுக்கு பின்னர் எமது அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.
சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னர் புதிய அரசாங்கம் உருவாகும் – ரணில் விக்ரமசிங்க Reviewed by NEWMANNAR on November 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.