மன்னார் மாந்தை உப்பு கூட்டுஸ்தாபனத்தின் புதிய தலைவர் ஏ.ஆர்.அமின் பதவியை பொறுப்பேற்றார் - Photos
மன்னார் மாந்தை உப்பு கூட்டுஸ்தாபனத்தின் புதிய தலைவராக அமைச்சர் றிஸாட் பதியுதீனினால் அண்மையில் நியமனம் செய்யப்பட்ட ஏ.ஆர்.அமின் அவர்கள் இன்று(19) புதன் கிழமை மதியம் தனது பதவியை பொறுப்பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் அவர் பதவியை பொறுப்பேற்ற நிதியில் மன்னார் மாந்தை உப்புக்கூட்டுஸ்தாபனத்தில் வரவேற்று நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்,கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் எம்.முஜாஹிர், மன்னார் மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையளர் எம்.ஏ.துவான் மன்சில் உட்பட உப்புக்குட்டுஸ்தாபனத்தின் பணியாளர்கள் புதிய தலைவரை வரவேற்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாந்தை உப்பு கூட்டுஸ்தாபனத்தின் புதிய தலைவர் ஏ.ஆர்.அமின் பதவியை பொறுப்பேற்றார் - Photos
Reviewed by NEWMANNAR
on
November 19, 2014
Rating:

No comments:
Post a Comment