அண்மைய செய்திகள்

recent
-

மதத்தின் பெயரால் தீவிரவாதம் முன்னெடுக்கப்படுவதை கண்டிக்க வேண்டும்: பாப்பரசர் வலியுறுத்தல்


மதத்தின் பெயரால் தீவிரவாதம் முன்னெடுக்கப்படுவதை உலகமெங்குமுள்ள இஸ்லாமிய தலைவர்கள் கண்டிக்க வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

துருக்கிக்கான 3 நாள் விஜயத்தை பூர்த்தி செய்து கொண்டு விமானத்தில் ரோமுக்கு திரும்புகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

 தீவிரவாதத்துடன் மதத்தை தொடர்புபடுத்துவது தீங்கு விளைவிக்கக் கூடியது என தான் அறிவதாக அவர் கூறினார்.

இந்த தீவிரவாத முறைமையிலிருந்து பெரும்பான்மையோர் விலகுவதற்கு வன்முறை தொடர்பான உலகளாவிய கண்டனம் உதவும் என அவர் தெரிவித்தார்.

துருக்கியிலான விஜயத்தின் போது மதங்களுக்கிடையிலான பிரிவினை குறித்து பாப்பரசர் கலந்துரையாடினார்.

அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என ஏனையவர்கள் கூறுவது தொடர்பில் பாப்பரசர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

 அனைத்து கிறிஸ்தவர்களும் அடிப்படைவாதிகள் என எம்மால் எவ்வாறு கூற முடியாதோ அதேபோன்று ஏனைய மதத்தவர்களையும் தீவிரவாதிகள் எனக் கூற முடியாது என அவர் கூறினார்.

துருக்கியில் 120 000 கிறிஸ்தவர்கள் மட்டுமே உள்ளனர். அந்நாட்டின் 80 மில்லியன் பிரஜைகளில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாவர்.

மதத்தின் பெயரால் தீவிரவாதம் முன்னெடுக்கப்படுவதை கண்டிக்க வேண்டும்: பாப்பரசர் வலியுறுத்தல் Reviewed by NEWMANNAR on December 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.