மன்னார் நானாட்டானில் கூட்டமைப்பினர் மைத்திரியை ஆதரித்து விசேட கலந்துரையாடல் (Photos)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச மட்டத்திலான மக்கள் சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை மாலை மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் பொது மண்டபத்தில் நானட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண சபை உறுப்பினர்களான பிறிமுஸ் சிராய்வா, அயூப் அஸ்மின், மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானபிரகாசம், சமூக சேவையாளர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிப்பதற்கான நோக்கம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களினால் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.
-இதன் போது மைத்திரி பால சிறிசேனாவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் மக்கள் ஆதரித்து அவரை வெற்றியடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மன்னார் நிருபர்-SLR
இதன் போது இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண சபை உறுப்பினர்களான பிறிமுஸ் சிராய்வா, அயூப் அஸ்மின், மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானபிரகாசம், சமூக சேவையாளர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிப்பதற்கான நோக்கம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களினால் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.
-இதன் போது மைத்திரி பால சிறிசேனாவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் மக்கள் ஆதரித்து அவரை வெற்றியடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மன்னார் நிருபர்-SLR
மன்னார் நானாட்டானில் கூட்டமைப்பினர் மைத்திரியை ஆதரித்து விசேட கலந்துரையாடல் (Photos)
Reviewed by NEWMANNAR
on
January 06, 2015
Rating:

No comments:
Post a Comment