அண்மைய செய்திகள்

recent
-

எயார் ஏசியா விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு?

விபத்­துக்­குள்­ளான எயார் ஏசியா கியூ.இஸட்.8501 விமா­னத்தை ஜாவா கடலில் தேடும் நட­வ­டிக்கை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக இந்­தோ­னே­சிய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

இந்­தோ­னே­சிய சுர­பயா நக­ரி­லி­ருந்து கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி 162 பேருடன் பய­ணித்த விமா­னமே விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.

அந்த விமா­னத்தின் கறுப்புப் பெட்­டியை உள்­ள­டக்­கி­யுள்ள அதன் வால் பகு­தியை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக நம்­பு­வ­தாக மீட்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

இந்­தோ­னே­சிய கடற்­படை கப்­ப­லொன்றால் அந்த விமா­னத்தின் வால் பகுதி என நம்­பப்­படும் பகுதி கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் மேற்­படி விமான கறுப்­புப்­பெட்­டியை கண்­டு­பி­டித்து மீட்கும் முகமாக நீர்மூழ்கிவீரர்கள் ஜாவா கடலின் அடித்தளத்திற்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ளனர்.
எயார் ஏசியா விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு? Reviewed by NEWMANNAR on January 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.