ரஷ்ய கால்பந்தாட்ட வீரர் சுட்டுக்கொலை
ரஷ்யாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கசான் மகோமெதோவ், இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் வடக்கு காகசஸின் டாஜெஸ் பகுதியில் உள்ள அன்ஷி மகா செக்கலா தேசிய கால்பந்தாட்ட லீக்கில் விளையாடி வந்தார்.
இந்நிலையில் மகோமெதோவ் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய கால்பந்தாட்ட வீரர் சுட்டுக்கொலை
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:


No comments:
Post a Comment