மன்னாரில் போலி நியமன கடிதம் வழங்கி அரச பணியாளனாக கடமை புரிந்தவர் விளக்கமறியலில்
மன்னார் மாவட்ட செயலகத்தில் போலியான நியமனக் கடிதம் வழங்கி ஒன்றரை வருடங்களாக அரச ஊழியராக கடமை புரிந்து வந்த நபர் ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேற்றாத்தீவு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மன்னார் மாவட்ட செயலகத்தில் குறித்த இளைஞன் போலி நியமனக் கடிதம் வழங்கி கடமை புரிந்து வந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மன்னார் பொலிஸில் முறையீடு செய்யப்பட்டதையடுத்து அந்நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (5) மன்னார் மாவட்ட நீதிவான் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த நபர் அரச ஊழியராக கடமை புரிந்த காலங்களில் அரச நிதியில் ஒரு இலட்சம் ரூபா கடன் பெற்றுள்ளதாகவும் ஒன்றரை வருடங்களாக அரச நிதியை சம்பளமாக பெற்றுள்ளதன் மூலம் அரச நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் இவருக்கெதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அந்நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னாரில் போலி நியமன கடிதம் வழங்கி அரச பணியாளனாக கடமை புரிந்தவர் விளக்கமறியலில்
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:


No comments:
Post a Comment