செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு
ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கியதாக பதுளை - எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதுளை - எல்ல தபால் நிலையத்தைச் சேர்ந்த பெரியசாமி ஞானசேகரன் என்ற தபால் ஊழியரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தபால் ஊழியர் எல்ல நியூபோர்ட் தோட்டத்தில் வாக்காளர் அட்டை தபால்களை விநியோகித்து விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தவேளையிலேயே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
தன்னைத் தாக்கும்போது தன்னிடம் 35 வாக்காளர் அட்டைகள் இருந்ததாகவும், அந்த வாக்காளர் அட்டைகளும் தன்னிடமிருந்த கையடக்கத் தொலைபேசி மற்றும் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி என்பவற்றையும் காணவில்லை எனவும் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
இதேவேளை, தனது மகனின் முகத்தில் செந்தில் தொண்டமான் தாக்கியதாகவும் அதன்போது , மகன் மயங்கி வீழ்ந்ததாகவும் முகத்திலிருந்து இரத்தம் கொட்டியதாகவும்தனது கணவரைப் பறிபொடுத்து இரண்டு மாத காலமாகவில்லை. இந்நிலையிலேயே மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தாக்குதலுக்குள்ளானவரின் தாயார் கண்ணீர் மல்கத் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர் செந்தில் தொண்டமான் இந்தத் தாக்குதலை தான் மேற்கொள்ளவில்லையென மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு
Reviewed by NEWMANNAR
on
January 05, 2015
Rating:

No comments:
Post a Comment