அண்மைய செய்திகள்

recent
-

அரலகங்விலவில் வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட அதிரப்படையினர் களத்தில்

அரலகங்வில பகுதியில் இடம்பெற்றுவருகின்ற தேர்தல் வன்முறைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அரலகங்வில மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றைய தினம் 5 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார கூட்டம் நிறைவு பெற்றதன் பின்னர், குறித்த இடத்தில் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எனினும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டமை குறித்து தமக்கு இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

அத்துடன், அரலகங்வில பகுதியை அண்மித்து, சிறு அளவிலான மேலும் நான்கு வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அரலகங்விலவில் வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட அதிரப்படையினர் களத்தில் Reviewed by NEWMANNAR on January 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.