எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய க்கூட்டமைப்பிற்கு கிடைக்காது விட்டால் பாராளுமன்றத்தை பகிஸ்கரிக்க வேண்டும்- வினோ எம்.பி.
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்க்கட்சி என்ற தகுதியையும்,அந்தஸ்தையும் இழந்துள்ளது.அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி அக்கட்சிக்கு உரித்தானது இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பிலும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் குறித்தும் அவரிடம் கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,,,
தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான நிமால் சிpறிபாலடி சில்வா கௌரவமான முறையில் பதவி விலகி பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அப்பதவியை வழங்க வேண்டும்.
இதுவே ஜனநாயகத்திற்கும்,நல்லாட்சிக்குமான அடையாளமாகும்.
இரண்டு பிரதான கட்சிகலான ஐக்கிய தேசியக்கட்சியும்,சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளமையால் பாராளுமன்றத்தில் 3 ஆவது பிரதான கட்சியாகவும்,அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள பிரதான எதிர்க்கட்சியாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பே உள்ளது.
எனவே எதிர் கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளுகின்ற தகுதியும்,உரிமையும் எம்மிடமே தற்போது வந்து சேர்ந்துள்ளது.
இதை நாம் தட்டிப்பறிக்கவும் இல்லை.யாரும் தட்டிப்பறிக்க இடம் கொடுக்கவும் முடியாது.
ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியிலும்,எதிர்க்கட்சியிலும் இருக்க ஆசைப்படுவதற்காக எமக்கான உரிமையை நாம் விட்டுக்கொடுக்கவும் முடியாது.
உலகில் எந்த ஜனநாயக மூலைகளிலும் நடவாத எல்லை தாண்டும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை எமது பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்க ஜனாதிபதியோ,சபாநாயகரோ நல்லாட்சியின் பெயரால் அனுமதிக்க கூடாது.
எனவே உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பாராளுமன்றத்தினை தமிழ் தேசியக்கூட்டமைப்பு பகிஸ்கரிக்க வேண்டும்.கட்சித்தலைமை உறுதியான முடிவை இவ்விடையத்தில் எடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய க்கூட்டமைப்பிற்கு கிடைக்காது விட்டால் பாராளுமன்றத்தை பகிஸ்கரிக்க வேண்டும்- வினோ எம்.பி.
Reviewed by NEWMANNAR
on
March 24, 2015
Rating:

No comments:
Post a Comment