உலகில் அதிக வயதுடையவர் என்ற பெருமையைப் பெற்று 6 நாட்களில் அமெரிக்காவின் அர்கன்சாஸைச் சேர் ந்த 116 வயது மூதாட்டி கெட்ருட் வீவர் மரணமடைந்துள்ளார். வீவர் அர் கன்சாசில் இருக்கும் சுகாதார மற்றும் மறுவாழ்வு மையத்தில் கடந்த திங்கட் கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். 1898 ஜ{லை 4 ஆம் திகதி பிறந்த வீவர் வீட்டுப் பணிப்பெண்ணாக பணி யாற்றியுள்ளார். ஜப்பானைச் சேர்ந்த 117 வயது மூதாட்டி மிசாவோ ஒகாவா கடந்த வாரம் மரணமடைந்ததை அடு த்தே கெட்ருட் வீவர் உலகின் வய தானவராக இடம்பிடித்தார். தனது நீண்டகால வாழ்வுக்கு அனை வருடனும் அன்புடன் பழகுவதையும் தானே சமைத்த உணவை உண்பதை யும் வீவர் காரணமாக குறிப்பிட்டிருந் தார். கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் ஜ{லை மாதம் இடம்பெறும் தனது 117 ஆவது வயது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். வீவரின் மரணத்தை அடுத்து உல கின் அதிக வயது கொண்டவராக மற் றொரு அமெரிக்க நாட்டவரான nஜர லீன் டொல்லி என்ற மூதாட்டி இடம் பிடித்துள்ளார். 1899 மே 23ம் திகதி பிறந்த அவர் அடுத்த மாதம் தனது 116 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.
Reviewed by Author
on
April 08, 2015
Rating:


No comments:
Post a Comment