யெமனுக்கான சர்வதேச செஞ் சிலுவை சங்கத்தின் அவசர மனி தாபிமான உதவிகளில் தாமதம் ஏற்பட்டிருக்கும் நிலையில் நாட் டின் தென்பகுதியில் 'pயா ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கும் ஜனாதி பதி அப்த்-ரப்பு மன்சூர் ஹதி ஆத ரவு படையினருக்கும் இடையிலான மோதலில் கடந்த 24 மணிநேரத் தில் 140க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். யெமனில் ஹதி அரசின் கடைசி அதிகார மையமாக இருக்கும் அதென் நகரிலேயே கடந்த திங் கட்கிழமை கடும் மோதல் இடம் பெற்றுள்ளது. ஹவ்தி கிளர்ச்சியா ளர்கள் யெமனில் தனது கட்டுப் பாட்டு நிலத்தை விரிவுபடுத்தும் முயற்சியாகவே தற்போது அதென் நகரை நோக்கி முன்னேறியுள்ள னர். இதில் 17 பொதுமக்கள் உட்பட அதெ னில் 140க்கும் அதிகமானவர்கள் கொல் லப்பட்டதாக ஏ.எப்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. இந்த கரை யோர நகரை கிளர்ச்சியாளர்கள் கைப் பற்ற முயலும் நிலையில் அங்கு தொட ர்ந்து மோதல் நீடிப்பதாக அங்கிரு ந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின் றன. மோதல்கள் நீடிக்கும் நிலையி லும் ஜனாதிபதி ஹதி தனது இரா ணுவத்தின் மூன்று முன்னணி அதி காரிகளை பதவி விலக்கியுள்ளார். அரேபிய தீபகற்பத்தின் வறிய நாடான யெமன் மிகவும் ஆபத்தான சூழலை எதிர்கொண்டிருப்பதாக நிவா ரணப் பணியாளர்கள் எச்சரித்துள்ள னர். யெமனில் ஹவ்தி கிளர்ச்சியா ளர்களுக்கு எதிராக சவ+தி அரே பியா தலைமையில் சுன்னி நாடுக ளின் கூட்டணி வான் தாக்குதல்களை நடத்திவரும் அதேவேளை 'pயா ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதர வளித்து வருகிறது. நிவாரணப் பணியாளர்களை ஏற் றிய சிறிய பயணிகள் விமானம் திங் கட்கிழமை யெமன் தலைநகர் சனாவை சென்றடைய முடிந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள் ளது. ஆனால் நிவாரண உதவி களை ஏற்றிச் செல்ல சரக்கு விமா னம் கிடைக்காத நிலையில் யெம னுக்கு அவைகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பதாக செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது. மனிதாபிமான நிலை மிக மோச மடைந்திருப்பதாக செஞ்சிலுவை சங்க பேச்சாளர் சிதாரா ஜபீன் எச்ச ரித்தார். ~~யெமனின் நிலைமை தொட ர்ந்தும் மோசமாக உள்ளது. குறிப் பாக அதெனில் அது உக்கிரமாக உள்ளது. சனாவுக்கு உதவிப் பொரு ட்களை கொண்டு செல்ல ஒரு சர க்கு விமானத்தை பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்" என்று யெமன் தலைநகரில் இருக் கும் ஜபீன் குறிப்பிட்டுள்ளார். ~~நிவாரண பொருட்களை கொண் டுவர (சவ+தி) கூட்டணியிடம் இருந்து எமக்கு அனுமதி கிடைத்துள்ளது. என் றாலும் பல நாடுகளுக்கு யெமனுக் கான விமான சேவைகளை இடை நிறுத்திக்கொண்ட நிலையில் மிக மிக குறைவான விமான சேவைகளே சனா வருகின்றன" என்று அவர் கூறினார். கடந்த மார்ச் 26ம் திகதி தொடக் கம் சவ+தி கூட்டணி யெமனில் ஹவ்தி இலக்குகள் மீது வான் தாக்குதல் களை நடத்திவருவதோடு ஜனாதிபதி ஹதி ஆதரவு படையினருக்கு வானூடே ஆயுதங்களையும் போட்டு வருகிறது. அதென் மற்றும் சனா நகரில் இரு க்கும் மக்கள் கட்டாய அடிப்படை தேவைகளை எதிர்பார்த்துள்ளனர். யெமனின் அல் அய்யாம் பத்திரி கையின் துணை ஆசிரியர் ப'ரா ஹில் ஹி'hம் ப'ராஹில் குறிப்பி டும்போது, ~~மக்களின் உணவு காலி யாகி வருகிறது. இங்கு தண்ணீரும் இல்லை. மின்சார வசதியும் இல்லை. மருத்துவமனைகள் கூட மோசமான நிலையில் இருக்கின்றன. பாதுகா க்க முடியாத சூழலில் காயமடை ந்த பலரையும் காணக்கூடியதாக உள்ளது. உதாரணத்திற்கு இங்கு முதலுதவிகளுக்குக் கூட வசதி இல்லை" என்றார். அதென் நகரில் மோதல் இடம்பெ றும் பகுதிகளில் இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை அப்பு றப்படுத்தும் முயற்சியின்போது செம்பிறை சங்கத்தைச் சேர்ந்த தொண்டு பணி யாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ள னர். ~~அதென் நகர வீதிகளில் இறந்த உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. இத னாலேயே நாம் 24 மணிநேர யுத்த நிறுத்தத்திற்கு கோரிக்கை விடுக்கி றோம். இதன்மூலம் அங்கிருக்கும் இற ந்த உடல்களை அப்புறப்படுத்த முடியுமாக இருக்கும்" என்று செஞ் சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த மேரி கிளயர் பெகலி குறிப்பிட்டிரு ந்தார். இதனிடையே ஹவ்தி கிளர்ச்சி யாளர்களுக்கு எதிரான சவ+தி கூட் டணியில் இணையுமாறு சவ+தி அரே பியா, பாகிஸ்தானுக்கு உத்தி யோகபூர்வமாக அழைப்பு விடுத்த தாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமை ச்சர் கவாஜh ஆசிவ் குறிப்பிட்டுள் ளார். "யுத்த விமானங்கள், யுத்த கப்பல்கள் மற்றும் படையினரை சவ+தி கேட்டுள்ளது" என்று திங்க ட்கிழமை நடந்த பாராளுமன்ற கூட்டுத் தொடரில் குறிப்பிட்டுள் ளார். பாகிஸ்தானுக்கு அதிக நிதி உதவி வழங்கும் நாடான சவ+தி அர பியாவுடன் அந்நாட்டு இராணுவ மற் றும் அரசியல் தலைமைகள் நெருங் கிய உறவு கொண்டுள்ளது. மறுபு றம் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் அயல் நாடான ஈரானோடு பாகிஸ்தானின் உறவு முறுகல் நிலை யிலேயே உள்ளது. ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டெம்பரில் சனாவை கைப்பற்றி ஜனாதிபதி ஹதியை வீட்டுக்காவ லில் வைத்தனர். பின்னர் அங்கிரு ந்து தப்பித்த ஹதி தெற்கில் இருக் கும் அதென் நகரில் அடைக்கலம் பெற்றார். தொடர்ந்து ஹவ்திக்கள் அதென் நகரை நோக்கி முன்னரே அவர் தற்போது சவ+தியில் தஞ்சம டைந்துள்ளார். யெமனில் ஹவ்திக்கள் தவிர அவ ர்களுக்கு ஆதரவாக மக்கள் ஆர்ப் பாட்டம் மூலம் பதவி கவிழ்க்கப்ப ட்ட முன்னாள் ஜனாதிபதி அலி அப் துல்லாஹ் சலாவின் விசுவாச படை யினரும் நாட்டின் கணிசமான நில த்தை கைப்பற்றியுள்ளனர்.தவிர அரபு தீபகற்பத்திற்கான அல் கொய்தா அமைப்பும் யெம னில் தாக்குதல்களை நடத்துகிறது.
Reviewed by Author
on
April 08, 2015
Rating:


No comments:
Post a Comment