குருத்துவ திருநிலைப்படுத்துதலும், முதல் நன்றி திருப்பலியும்.
விடத்தல்தீவு கிராமத்தின் ,நீக்கிலாபிள்ளை.சீமான்பிள்ளை,சீமான்பிள்ளை, மேரிகிரேஸ் தம்பதிகளின் புதல்வன் அருட்சகோதரர் அல்ஸ்ரன் றோச் அவர்கள் , அமல மரித்தியாகிகள் சபையின் இறைவனின் குருவாக எமது மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ,அதிவந்தனைக்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களினால் 08 - 04 - 2015 ம் திகதி புதன்கிழமையன்று மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இறைவனின் குருவாக திருநிலைப்படுத்தப்பட உள்ளார்.
மேலும்அருட்தந்தை .அல்ஸ்ரன் றோச் அடிகளார் தனது முதலாவது நன்றி திருப்பலியை 15 - 04 - 2015 ம் திகதி புதன்கிழமை எமது புனித அடைக்கலமாத ஆலயத்தில் கிராம மக்களோடும் ,பெற்றோர் ,உறவினரோடும் சேர்ந்து ஒப்புக்கொடுக்க உள்ளார்.
இவர் அமலமரித்தியாகிகள் சபையின் எமது கிராமத்தின் இரண்டாவது குருவாக திருநிலைப்படுத்தப்படுவதை இட்டு மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி கூறுவதுடன் இவரின் பணிவாழ்வில் இறைவனின் அருட்கரம் இவரோடு இருந்து வழிநடத்த செபித்து ,வாழ்த்துகின்றோம்.
ஜேம்ஸ் .சுதாகரன் ,
குருத்துவ திருநிலைப்படுத்துதலும், முதல் நன்றி திருப்பலியும்.
Reviewed by NEWMANNAR
on
April 07, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 07, 2015
Rating:


No comments:
Post a Comment