அண்மைய செய்திகள்

recent
-

2ம் இணைப்பு -நானாட்டான் பாடசாலைக்கு கடமைக்கு வந்தபோது விபத்துக்குள்ளாகி மரணமடைந்த ஆசிரியர் ஐசிந்தா அவர்களின் மரணம் தொடர்பான உண்மை நிலை என்ன?-Photos



ஆசிரியர் ஒருவரின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் ம.வி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்பித்து வந்த ஆசிரியரான திருமதி ஜெசிந்தா மத்தேயு பிள்ளை(வயது-51) கடந்த 30 ஆம் திகதி பாடசாலைக்கு வருகை தந்த போது வீதியில் பலத்த பாயங்களுடன் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த ஆசிரியர் உயிரிழந்தார்.

அரிப்பு - நானாட்டான் பிரதான வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து குறித்த ஆசிரியர் கடந்த 30 ஆம் திகதி நானாட்டான் ம.வி பாடசாலைக்கு செல்லதற்காக குறித்த வீதியல் நடந்து சென்று கொண்டிருந்தார்.

இதன் போது குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு செல்லும் பிரதான வீதியில் பலத்த காயங்களுடன் கிடந்த நிலையில் நீண்ட நேரத்தின் பின் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,பின் யாழ் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது ஆசிரியர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியரின் மரணம் தொடர்பாக முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த போதும் இது வரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றது.

குறித்த பிரதான வீதியில் தொடர்ச்சியாக ஓடித்திரியும் டிப்பர் வாகனம் மோதி ஆசிரியர் உயிரிழந்துள்ளாரா? அல்லது வேறு சம்பவங்களினால் ஆசிரியருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்ற விடையம் இது வரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் குறித்த ஆசிரியரின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரியும்,பாடசாலைக்குச் செல்லும் பிரதான வீதியில் ஓடுகின்ற டிப்பர் வாகனத்தின் அதிகரிப்பையும்,வேகத்தையும் குறைக்கக்கோரியும் மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் பாடசாலைகளில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் நானாட்டான் பிரதேசச் செயலகத்தை சென்றடைந்தது.பின் மன்னார் அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட வேண்டிய மகஜர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.பரமதாசிடம் கையளிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து மாணவர்கள் பாடசாலைக்குச் சென்றனர்.


















நானாட்டான் பகுதியில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுக்க கனரக வாகனங்களின் அத்துமீறிய செயற்பாட்டை தடுக்க அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நானாட்டான் பிரதேச மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் ஜெசிந்தா மத்தேயு பிள்ளை(வயது-51) என்பவரது மரணத்திற்கு நீதி கோரி மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் ம.வி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இன்று(7) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-போராட்டத்தின் முடிவில் நானாட்டான் பிரதேசச் செயலாளரிடம் கையளித்த மகஜரிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

-குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,,


மாணவர்கள்,ஆசிரியர்கள்,பொதுமக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தங்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், நானாட்டான் நகரில் மூன்று பாடசாலைகளில் ஏறக்குறைய 32 கிராமங்களில் இருந்து வரும் 1300 மாணவர்கள் கல்விகற்று வருகின்றார்கள்.

இப்பாடசாலைக்கு வரும் மாணவர்கள்,ஆசிரியர்கள் அனைவரும் பிரதான பாதைகளான வங்காலை - நானாட்டான் வீதி,அரிப்பு - நானாட்டான் வீதி,உயிலங்குளம் - நானாட்டான் வீதி,முருங்கன் - நானாட்டான் வீதிகளையே பயன்படுத்துகின்றனர்.

மேலும் இந் நகரில் பாடசாலைகளுக்கு அண்மையில் பிரதேச செயலகம் ,பிரதேச சபை அலுவலகம்,மதவழிபாட்டுத்தலங்கள்,வங்கிகள், நூல் நிலையம்,வர்த்தக நிலையங்கள்,தபாற் கந்தோர்,எரிபொருள் நிரப்பு நிலையம் போன்றனவும் கானப்படுவதனால் மக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாக உள்ளது.

இவ்வாறு பாடசாலைகளையும் முக்கியமான மக்கள் சேவை நிலையங்களையும் கொண்ட இந்நகரத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் பொது மக்களும் எதிர் நோக்குகின்ற சில முக்கிய பிரச்சினைகளை தங்களது கவனத்திற்குக் கொண்டுவருவதுடன் அண்மையில் பாடசாலைக்குக் கடமைக்காக வந்து கொண்டிருந்த வேளை ஆசிரியை ஐசிந்தா மத்தியாஸ் பிள்ளை எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளாகி மரணித்துள்ளார்.

இவ்விடயம் ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் சந்தேகத்தையும்,பெரும் தாக்கத்தையும்,மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே மரணித்த ஆசிரியரின் மரணம் தொடர்பான உண்மை நிலையை கண்டறிய உரிய விசாரணைகளை மேற் கொள்ள ஆவனம் செய்யுமாறும் ஏனைய பிரச்சினைகளுக்கு உரிய திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பிரச்சினைகள்

30.03.2015பாடசாலைக்கு கடமைக்கு வந்தபோது விபத்துக்குள்ளாகி 31.03.2015 மரணமடைந்த ஆசிரியர் திருமதி. ஐசிந்தா. மத்தியாஸ் பிள்ளையின் மரணம் தொடர்பான உண்மை நிலை இது வரையும் தெரியாதுஉள்ளது.

இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பீதியும் கவலையும் அடைந்துள்ளனர்.
எனவே இம் மரணம் தொடர்பாக விசாரணையைத் துரிதப்படுத்தி உண்மை நிலையைக் கண்டறிந்து ஆசிரியர்,மாணவர்களின் பீதியையும் கலக்கத்தையும் நீக்க ஆவனம் செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பல வருடங்களாக தகுந்த பராமரிப்பின்றி காணப்பட்ட மன்னார் நானாட்டான் ஊடாக புத்தளம் வரையிலான வீதியானது இன்று திருத்தியமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டமையினையிட்டு பாராட்டுக்களை தெரிவித்து நிற்கின்ற இவ்வேளையில் இதனை தமக்கு சாதகமாக்கிக்கொள்ளும் கனரக வாகன சாரதிகள் வேகக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளாது மிகக்கூடிய வேகத்தில் பயணித்து வருவது எமது மாணவர்கள் பாதசாரிகளை பயஉணர்விற்கு இட்டுச் செல்கின்றது.

எனவே எமது பாடசாலைக்கு மிகவும் அண்மையில் கனரக வாகனங்கள்கள் மாணவர்களினதும் பாதசாரிகளினதும் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பயணத்தை மேற்கொள்வதற்கு உகந்த வீதித்தடைகளை ஏற்படுத்தி தருமாறு தங்களை பணிவுடன் வேண்டிநிற்கின்றோம்.

எமது பாடசாலைக்கும் நகரிற்கும் அருகில் அமைக்கப்பட்டுள்ள வீதி சுற்றுவட்டபாதையானது பாதுகாப்பற்ற முறையில் அதாவது சுற்று வட்டப்பாதையின் ஓரங்கள் (அயற்பகுதிகள்) மிகவும் குறைந்த உயரங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருப்பதும் மணலேற்றி வருகின்ற கனரகவாகனங்கள் இப்பாதையினூடாக வேகமாக பயணிக்கின்ற போது இக்கனரகவாகனங்களிலிருந்து கொட்டப்படுகின்ற மணலானது வீதிகளில் கொட்டப்பட்டு பரவுவதன் காரணமாக எமது மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளில் பயணிக்கின்ற போது சறுக்கி விழுந்து விபத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுகின்றது.

எனவே இச்சுற்று வட்டபாதையை அதிகூடிய பாதுகாப்பானதாக மாற்றவும், இங்கு குவியும் மண்ணை கால இடைவெளியில் அகற்றவும் நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்பார்த்திருக்கின்றோம்.

எமது பாடசாலையானது 32 ற்கும் அதிகமான கிராமங்களிலிருந்து வருகை தரும் மாணவர்களைக் கொண்டது.

இதில் பல கிராமங்கள் முருங்கன் - நானாட்டான் வீதியை அண்மித்த பகுதிகளை உள்ளடக்கியது.

இந்நிலையில் குறித்த நானாட்டான் - முருங்கன் வீதியானது செப்பனிடப்படாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

இதனால் இப்பாதையினூடாக பாடசாலையை நோக்கி பயணிக்கும் மாணவர்களும் பொது மக்களும் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே இக்குறித்த வீதியினை கூடிய விரைவில் திருத்தி செப்பனிட்டு இலகுவான பயணத்திற்கு வழிவகுக்குமாறு கேட்டுநிற்கின்றோம்

பாடசாலை வரும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணமும் வரக்கூடிய விபத்துக்களில் இருந்து தவிர்க்கும் முகமாகவும் பாடசாலை நாட்களில் காலை 6.30மணி தொடக்கம் 8.00 மணிவரையும் மாலை 12.30மணி தொடக்கம் 2.30 மணிவரையும் கனரக வாகனங்கள் மேற்குறிப்பிட்ட வீதிகளினைப் பயன்படுத்த தடைவிதிக்க ஆவனசெய்யுமாறு வேண்டி நிற்கின்றோம்.

மன்- நானாட்டான் பாடசாலையானது நானாட்டான் நகர மத்தியில் அமைந்திருப்பதனாலும் இங்கு பல கிராம மக்கள் வந்து போகின்ற இடமாக இருப்பதனாலும் இந்நகர சூழலை அழகாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருக்கம் முகமாகவும் இப்பகுதியில் கட்டப்படும் கால் நடைகள் இந் நகரப் பகுதிக்குள் கட்டாது இருப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.என கேட்டுக்கொள்வதாக குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2ம் இணைப்பு -நானாட்டான் பாடசாலைக்கு கடமைக்கு வந்தபோது விபத்துக்குள்ளாகி மரணமடைந்த ஆசிரியர் ஐசிந்தா அவர்களின் மரணம் தொடர்பான உண்மை நிலை என்ன?-Photos Reviewed by NEWMANNAR on April 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.