அண்மைய செய்திகள்

recent
-

'சம்பந்தன்' என்ற பெயர் 'சம்பிக்க' என்றிருந்தால் எமக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்கும் : அரியநேத்திரன்



 பாராளுமன்ற நடைமுறையை இனவாதம் மாற்ற முனைகிறது. இதுதான் இலங்கை நாட்டின் சிறப்பம்சம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மேற்கு வலய பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலய மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு விழா அதிபர் சு.ரவிசங்கர் தலைமையில் நேற்று இடப்பெற்றது. பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அரியநேத்திரன் தொடர்ந்து கூறுகையில், பாராளுமன்றத்தில் தற்போது தேசிய அரசாங்கம் அமைந்துள்ளதாக ஒருசாரார் கூறுகின்றனர் . இன்னுமொரு சாரார் நல்லாட்சி இடம்பெறுவதாக கூறுகின்றனர். என்னைப்பொறுத்தமட்டில் இந்த இரண்டு ஆட்சிகளும் இங்கில்லை. தேசிய அரசாங்கமெனில் எதிர்கட்சிதலைவர் என்றபதவி இருக்க தேவையில்லை நல்லாட்சியெனில் கடந்த அரசில் ஊழல்செய்ததாக சந்தேகிக்கப்பட்ட பெயர்வழிகள் சிலர் மீண்டும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு நல்லாட்சி என்று கருதமுடியும். பாராளுமன்றத்தில் ஏற்கனவே எதிர்கட்சியாக இருந்த பொதுசன ஐக்கிய முன்னணியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சுமார் 28 உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்ட நிலையில் அடுத்த எதிர்கட்சிநிலையில் இருப்பது தமிழ்தேசிய கூட்டமைப்புத்தான் அவ்வாறாகின் எதிர்கட்சிப்பதவி சம்பந்தன் ஐயாவுக்கே தார்மீக ரீதியாக சபாநாயகரால் அறிவிக்க வேண்டும் . ஆனால் "சம்பந்தன்" என்ற பெயர் "சம்பிக்க" என இருக்குமானால் சிலவேளைகளில் இனவாதிகள் ஏற்றுக்கொண்டிருப்பர.; சம்பந்தர் தமிழர் என்பதால் எதிர்கட்சி தலைவர் பதவியை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வழங்கவிடாமல் தடுப்பதற்காக இப்போது பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ்குணவர்தனவை எதிர்கட்சி தலைவராக நியமிக்க பல பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தை இனவாத பாராளுமன்ற உறுப்பினர்களான விமல்வீரவன்சா உட்பட பலர் கையொப்பம் இட்டு சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர். இவ்வாறான செயல் பாராளுமன்ற நடைமுறைக்கு முற்றிலும் முரனான செயல். எதிர்கட்சித்தலைவர் என்பது பாராளுமன்றத்தில் ஆளும்கட்சியில் பலகட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால் அடுத்தநிலையில் எதிர்தரப்பில் கூடிய உறுப்பினர்களை எந்தக்கட்சி வைத்தள்ளதோ அது எதிர்கட்சி அந்தஸ்தை தானாக பெறும். அவ்வாறு தற்போது இருப்பது தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமே 13 ஆசனங்களை கொண்ட கட்சியாகும் இதன் முடிவு எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி எதிர்பார்கின்றோம். பாராளுமன்ற நடைமுறையை இனவாதமாக மாற்ற முயல்வதை காணமுடிகிறது. எதிர்கட்சி தலைவர் பதவி என்பது சலுகைகள் அடிப்படையில் செல்வாக்கு அடிப்படையில் தீர்மானிப்பதில்லை. நடைமுறையில் வழங்கப்படுகின்ற பாராளுமன்ற சிறப்புரிமையே எதிர்கட்சி தலைவர் பதவியாகும். இதற்கு கையொப்பங்கள் வைத்து பெரும்பான்மையை காட்டவேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பெரும்பான்மையை காட்டி எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்படுமானால் அது "எதிர்கட்சி தலைவர்" என்ற பதவியை "எதிர்தரப்பு தலைவர்" என சபாநாயகர் மாற்றம் செய்ததாக கருத வேண்டியநிலை ஏற்படும். ஒரு எதிர்கட்சி தலைவர்பதவி தமிழருக்கு வழங்ககூடாது என தடுக்கும் பேரினவாதம் எப்படி வடகிழக்கு அரசியல்தீர்வுவழங்க முன்வருவார்கள் என்பதை தமிழ் மக்களாகிய நாம் சிந்தித்து தமிழரின் அரசியல் பலத்தை உறுதி செய்ய எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து எமது பலத்தை நிருபிக்க அனைவரும்ஒன்றிணைய வேண்டும்.
'சம்பந்தன்' என்ற பெயர் 'சம்பிக்க' என்றிருந்தால் எமக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்கும் : அரியநேத்திரன் Reviewed by Author on April 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.