அண்மைய செய்திகள்

recent
-

சீனா பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் அவசரமாக தரையிறக்கம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனாவின் ஷங்காய் நகருக்குப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்பக் கோளாறினால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்தது.

தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை வேறொரு விமானம் மூலம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பிற்பகல் 02.10க்கு புறப்பட்ட விமானம், 02 மணித்தியாலங்களின் பின்னர், 04.55 அளவில் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர பொது முகாமையாளர் கூறினார்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை 159 பயணிகளுடன் சென்ற மிஹின் லங்கா விமானமொன்று சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

MJ501 என்ற அந்த விமானம் டாக்கா நகரை நோக்கி, அன்றைய தினம் காலை 7.30க்கு
புறப்பட்டுச் செல்லவிருந்த வேளையில், 2 மணித்தியாலங்களுக்கு தாமதிக்கப்பட்டது.

தாமதத்தின் பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்ற போதிலும், மீண்டும் திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டிருந்தது.
சீனா பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் அவசரமாக தரையிறக்கம் Reviewed by NEWMANNAR on April 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.