நல்லிணக்கம் இல்லாவிடின் தேசிய ஐக்கியம் ஏற்படாது நல்லிணக்கம் ஏற்படாவிட்டால் இலங்கையில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியடையும்
நல்லிணக்கம் இல்லாவிடின் தேசிய ஐக்கியம் ஏற்படாது நல்லிணக்கம் ஏற்படாவிட்டால் இலங்கையில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
'இந்து'பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நல்லிணக்கம் ஏற்படாவிட்டால் இலங்கையில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியடையும்.இதுவே மிக முக்கியமான விடயம் என நான் கருதுகிறேன். சமீபத்தில் உருவாக்கப்பட்ட நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணியை தேசிய ஐக்கியம்மற்றும் நல்லிணக்கத்திற்கான நிரந்தர அலுவலகமாக மாற்றவுள்ளோம். இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் எமக்கு வழங்கியுள்ள உதவிகளினால் நாங்கள் ஊக்கமடைந்துள்ளோம். இலங்கை தற்போது நாட்டின் வெளிவிவகார கொள்கையை சீரமைத்துவருகின்றது. முன்னைய அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளை முற்றாக சீர்குலைத்துள்ளதை தொடர்ந்து அதனை சரிசெய்வதற்கு, நல்லுறவை மீள ஏற்படுத்துவதற்கு இலங்கை தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிபொறுப்பையேற்று இரண்டு மாதங்களுக்குள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். இதன் மூலமாக நட்புறவு பற்றிய வலுவான செய்தியொன்றை அவர் எங்களுக்கு வழங்கியுள்ளார். மஹிந்த ராஜபக்சவை அவரது மோசமான ஆட்சிக்காகவே மக்கள் தோற்கடித்தனர். அவரது ஆட்சியில்,அவரது குடும்பத்தின் ஊழல்,மனித உரிமைகள் இல்லாத நிலை,சில கொலைகள் மற்றும் ஓட்டுமொத்தத்தில் சுதந்திரம் இல்லாதநிலை காணப்பட்டது. ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாங்கள் அனுபவிக்கின்ற சுதந்திர உணர்வு மிகப்பெரியது என அவரது முன்னாள் அமைச்சர்களே தெரிவிக்கின்றனர். இது பொலிஸ் நாடாக இருந்தது. அதனை மக்கள் கவிழ்த்துள்ளனர். இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் அதற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் அற்புதமான உறவு நிலவுகின்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தங்கள் அடையாளத்தை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது உரத்துக் குரலெழுப்புவார்கள். ஆனால் எங்கள் மத்தியில் சிறந்த உறவு காணப்படுகின்றது. நான் நிச்சயமாக மீண்டும் அரசியலுக்குள் நுழைய மாட்டேன், அது அசிங்கமான விடயம். ஆனால் எனது மகன் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.
நல்லிணக்கம் இல்லாவிடின் தேசிய ஐக்கியம் ஏற்படாது நல்லிணக்கம் ஏற்படாவிட்டால் இலங்கையில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியடையும்
Reviewed by Author
on
April 04, 2015
Rating:
Reviewed by Author
on
April 04, 2015
Rating:


No comments:
Post a Comment