உதயமானது மடு மாந்தை உதைபந்தாட்ட லீக்-Photos
எமது பிரதேசத்தின் நீண்டகாலத் தேவையாகவிருந்த, எமது பிரதேச மக்களால் அதிகமாக விரும்பி விளையாடப்படும் உதைபந்தாட்டத்தை மடு, மாந்தை பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள உதைபந்தாட்ட ஆர்வலர்களும் அதன் பலனை அடையவேண்டுமென்ற நோக்கத்தில் புதிய கழகங்களை உள்ளடக்கிய மடு மாந்தை உதைபந்தாட்ட லீக் என்ற புதிய லீக், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் நேற்றிலிருந்து (04/04/2015) உதயமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
04/04/2015 அன்று நடைபெற்ற புதிய லீக்கிற்கான நிர்வாகத்தெரிவிற்கான பொதுக்கூட்டமானது எமது போசகர்களுள் ஒருவரான மடுமாதா ஆலய பரிபாலகர் அருடபணி எமிலியானுஸ்பிள்ளையின் ஆசிச் செய்தியுடனும். இன்னொரு போசகர்களுள் ஒருவரான அருட்பணி றஜனிக்காந்தின் ஆசியுரையுடன் ஆரம்பமானது. நிர்வாகத்தெரிவினை எமது போசகர்களுள் ஒருவரான அருட்சகோதரர் விஜயதாசன் ஆரம்பித்து வைத்தார்.
நிர்வாக உறுப்பினர்களாக
தலைவர்
திரு.ம.மதுரநாயகம் (வைத்திய கலாநிதி)
உபதலைவர்கள்
1.திரு. மகேந்திரன்( உதவி அதிபர்)
2.திரு.டொண் பிரான்சிஸ்
3.திரு. யோண்சன்
4.திரு.அசீம்
5.திரு.அனஸ்ரின்.
செயலாளர்
திரு.ஒகஸ்ரின்(உடற்கல்வி ஆசிரியர்)
உபசெயலாளர்
திரு.நிக்சன்( வருமானவரி அலுவலர் - மாந்தை மேற்கு பிரதேச சபை)
பொருளாளர்
திரு.யெனிங்ஸ்( செயலாளர் - மாந்தை மேற்கு பிரதேச சபை)
உபபொருளாளர்
திரு.றஞ்சித் டிலிப் குமார்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிர்வாகத் தெரிவுக்கூட்டத்திற்கு கிராம சேவையாளர் லோகநாதன், விளையாட்டு அதிகாரி திரு.அஸ்கர், மற்றும் நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.
தகவல்
செயலாளர் - மடு மாந்தை உதைபந்தாட்ட லீக்.
உதயமானது மடு மாந்தை உதைபந்தாட்ட லீக்-Photos
Reviewed by NEWMANNAR
on
April 06, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 06, 2015
Rating:








No comments:
Post a Comment