அண்மைய செய்திகள்

recent
-

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்: 65 வயது மூதாட்டியின் அதிசயம்



ஜேர்மனியில் 13 குழந்தைகளுக்கு தாயான மூதாட்டி ஒரே பிரசவத்தில் மேலும் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி தலைநகர் பெர்லின் பகுதியில் வசிப்பவர் அன்னிக்ரெட் ரவுனிக்(Annegret Raunigk 65). ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி ஆசிரியரான இவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் மற்றும் 7 பேரக்குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் அவர் மீண்டும் கர்ப்பமானார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் 4 குழந்தைகள் வளர்வதாக தெரிவித்தனர். இது குறித்து அன்னிக்ரெட் கூறுகையில், எனது கடைசி மகள் அவளுக்கு தம்பி அல்லது தங்கை வேண்டும் என்று விரும்பினாள். இதன் காரணமாகவே நான் குழந்தை பெற்றுகொள்ள சம்மதித்தேன். மேலும் என் வயிற்றில் 4 குழந்தைகள் வளர்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவர் 3 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதன் மூலம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற உலகின் வயதான தாய் என்ற பெயரை அன்னிக்ரெட் பெற்றுள்ளார்.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்: 65 வயது மூதாட்டியின் அதிசயம் Reviewed by Author on May 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.