
சுவிட்சர்லாந்து நாட்டில் கொலையை செய்துவிட்டு நியூசிலாந்திற்கு தப்பிய இலங்கையை சேர்ந்த நபரை சுவிஸ் அரசிடம் ஒப்படைக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் அதே நாட்டை சேர்ந்த தனது காதலியுடன்(23) சுவிஸில் உள்ள பேசல் மண்டலத்தில் கடந்த 2000ம் ஆண்டில் வசித்து வந்துள்ளார்.
அதே ஆண்டில் இவர்கள் இருவருக்கும் எழுந்த தகராரின் விளைவாக, தனது காதலியை Kleinbasel நகரில் உள்ள குடியிறுப்பில் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், குற்றத்திலிருந்து தப்பிக்க நியூசிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 2001ம் ஆண்டிலிருந்த அந்நாட்டில் தங்கியிருந்த அவர் முறைகேடான ஆவணங்களை அரசிடம் காட்டி 2014ம் ஆம் ஆண்டு நியூசிலாந்து குடியுறுமை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
நபரின் சட்டவிரோதமான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அந்த நபரை நியூசிலாந்து பொலிசார் Auckland நகரில் கைது செய்தனர்.
சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்த நபரை தனது அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு சுவிஸ் அரசு நியூசிலாந்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இது குறித்து பேசிய Auckland நீதிமன்ற நீதிபதி, சுவிஸில் கொலை குற்றம் சாட்டப்பட்டு, நியூசிலாந்து நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளது நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் என கண்டித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சுவிஸ் நீதிமன்றத்தில் கொலை குற்றவாளியை விசாரிக்க உள்ளதால், அந்நாட்டிடம் குற்றவாளியை ஒப்படைக்க முன்வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கொலை குற்றவாளிகள் 15 வருடங்களுக்கு பின்னர் தான் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால், இலங்கை நபர் எப்போது சுவிஸ் அரசிடம் ஒப்படைக்கப்படுவார் என்ற உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும், நியூசிலாந்து அரசின் இந்த முடிவிற்கு எதிராக கொலை குற்றவாளி அந்நாட்டு நீதிமன்றத்தில் இன்னும் 15 நாட்களில் மேல்முறையீடு செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment