
புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டனை முறையாக பெற்றுகொடுக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்;துக்கு இன்று காலை திடீர் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி யாழ். வேம்படி உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்டுபடுத்தப்பட்ட படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். குற்றவாளிகள் சரியான முறையில் இனங்காணப்பட்டு தண்டனைகள் பெற்று கொடுக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.
No comments:
Post a Comment