அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்ப் பெண்கள் இரும்புத் தடியால் தாக்கப்பட்ட சம்பவம்! நேரில் பார்வையிட்ட யோகேஸ்வரன் எம்.பி -Photos


மட்டக்களப்பு தளவாய்ப் பிரதேசத்தில் விறகு வெட்ட காட்டுப் பகுதிக்குள் சென்ற தமிழ் பெண்கள் மீது இரும்பு தடியால் அடித்து தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தளவாயைச் சேர்ந்த 56 வயதுடைய குணம் சிறிதேவிப்பிள்ளை, ஐயங்கேணியைச் சேர்ந்த 60 வயதுடைய சித்திரவேல் இராசம்மா ஆகிய இருவருமே தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் சென்ற மற்றுமொருவர் தாக்குதலிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மட்டக்களப்பு தளவாய் காட்டுப் பகுதியில் விறகு வெட்டிக் கொண்டிருந்த பெண்கள் மீது போதையில் இருந்ததாக கூறப்படும் குறித்த முஸ்லிம் இளைஞன் பாலியல் ரீதியில் அணுகியுள்ளார். அதை ஏற்க மறுத்த குறித்த வயோதிப் பெண்கள் மீது அருகிலிருந்த இரும்பு தடியால் அடித்து தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த இரண்டு பெண்களும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்கியதாக கூறப்படும் இளைஞன் பிரதேச மக்கள் தன்னைத் தாக்கியதாக கூறி பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களை நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நடைபெற்ற சம்பவத்தையும் கேட்டறிந்து குறித்த சம்பவமானது தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன வன்முறையை தூண்டும் செயல் என்பதால் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது பொலிஸார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தண்டனை பெற்றுக் கொடுப்பதுடன், எல்லை பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு இனியும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாதவாறு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஏறாவூர் பொலிஸாரிடம் வேண்டுகோள் முன்வைத்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் செலவுக்காக சிறுதொகைப் பண உதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





தமிழ்ப் பெண்கள் இரும்புத் தடியால் தாக்கப்பட்ட சம்பவம்! நேரில் பார்வையிட்ட யோகேஸ்வரன் எம்.பி -Photos Reviewed by NEWMANNAR on May 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.